அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான இலங்கைஅணிவீரர் தனுஸ்க குணதிலக அவுஸ்திரேலியாவிற்குள் நடமாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீதிமன்றம் தளர்த்தியுள்ளது
தனது பிணைகளில் தளர்வை செய்யுமாறு கோருவதற்காக தனுஸ்ககுணதிலக சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இந்த மாதம் அவுஸ்திரேலியாவிற்குள் இரண்டு தடவை சுதந்திரமாக நடமாடுவதற்கு ஏற்ற விதத்தில் பிணையில் தளர்வை மேற்கொள்ளுமாறு தனுஸ்ககுணதிலக நீதிமன்றை கோரியிருந்தார்.
இந்த கோரிக்கையை செவிமடுத்த நீதிபதி இந்த கிழமை நான்கு நாட்களும் மாத இறுதியில் நான்குநாட்களும் தனுஸ்ககுணதிலக விமானநிலையத்தின் சர்வதேச புறப்படும் பகுதிக்கு செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
எனினும் அங்கு செல்வதற்கு 48 மணித்தியாலத்திற்கு முன்னர் தனுஸ்ககுணதிலக பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எனினும் தனுஸ்ககுணதிலக வாரத்தில் மூன்று நாட்கள் காவல்நிலையத்திற்கு செல்லவேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிபதி தனுஸ்ககுணதிலக ஒரு கையடக்க தொலைபேசியை மாத்திரம் பயன்படுத்தலாம் டேட்டிங் பக்கங்கள் அப்களை பயன்படுத்த முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.