உக்ரைன் போரில் உக்ரைனிற்கு மேற்குலகம் வழங்கும் வெடிபொருட்களின் அளவு குறித்து கரிசனை எழுந்துள்ள நிலையில் வெளிநாடுகளின் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதற்காக அவுஸ்திரேலியா ஏவுகணைகளை தயாரித்து அமெரிக்காவிற்கு வழங்கவுள்ளது.
இருநாடுகளின் வெளிவிவகார பாதுகாப்பு அமைச்சர்கள் மத்;தியில் பிரிஸ்பேர்னில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கையில் அவுஸ்திரேலியா கைச்சாத்திடும் .
இந்த உடன்படிக்கை மூலம் ஆயுதஉற்பத்தியில் ஒரு முக்கிய நாடு இடத்திற்கு அவுஸ்திரேலியா தன்னை உயர்த்திக்கொள்ளும்.
மேலும் உள்நாட்டு ஆயுத உற்பத்திகளை அவுஸ்திரேலியானவினால் அதிகரிக்க முடியும்.
வெள்ளிக்கிழமை இருநாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்தித்தவேளை இந்த உடன்படிக்கை குறித்து இறுதிசெய்துள்ளனர்.
ஏவுகணை திட்டத்தில் அமெரிக்க அரசாங்கம் 4பில்லியன் டொலர்களை முதலீடு செய்யும்.