நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் ஈழத்து மண்ணின் மைந்தன், தாவடி மைந்தன் ஜெய் ஆகாஷ் ஈழத்திற்கு வருகின்றார். எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி தாவடி அம்பலவாணர் முருக ஆலயத்தில் புதிய மஞ்சம் ஓட்டத்தில் கலந்து கொள்ள வருகின்றார்.
நடிகர் ஜெய் ஆகாஷ் ரோஜாவனம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் காலடி எடுத்துவைத்தார். அத்துடன் ரோஜாக் கூட்டம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது, கன்னடம், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போதும் நடிகர் ஜெய் ஆகாஷ் சி-தமிழ் தொலைக்காட்சியில் அபி டெய்லர் சீரியலில் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Zee Tamil தொலைக்காட்சியின் 2021 சிறந்த சின்னத்திரை நடிகருக்கான போட்டியில் அதிக புள்ளிகளை மக்களிடமிருந்து பெற்று இச் சாதனையை அடைந்துள்ளார்.
தற்போது சின்னத் திரையில் முக்கிய தொடரில் நடித்து வரும் ஜெய் ஆகாஷ் அமைச்சர் என்ற படத்தை இயக்கி அதில் நாயகனாக நடித்தும் வருகிறார்.
எனது சகோதரரான ஜெய் ஆகாஷிற்கு என் பேரன்பையும் வாழ்த்தையும் பகிர்ந்துகொள்கிறேன். ஈழத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்திய சினிமாவில் சாதனை படைக்கும் என் சகோதரர் ஜெய் ஆகாஷ்
