கடந்த வருடம் ரி20 உலககிண்ணப்போட்டிகளிற்காக அவுஸ்திரேலியா சென்றவர்களில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கவின் இரண்டு உறவினர்களும் காணப்பட்டனர் என விடயமறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ரி20 உலக கிண்ண செலவுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் தொடர்பில்லாத 35 பேருக்கு அவுஸ்திரேலிய விசாவிற்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அந்த குழுவில் பயணித்த அமைச்சரின் உறவினர்கள் இருவரின் பெயர்கள் இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.