இந்தியாவுக்கு இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயத்தை முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை (21) இரவு நாடு திரும்பினார்.
ஜனாதிபதியுடன் 17 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இந்தியாவின் புதுடில்லிக்கு 20 ஆம் திகதி வியாழக்கிழமை சென்றிருந்தனர்.
அவர்கள் அனைவரும் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL196 இல் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வரவேற்றார்.
அதன் பின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தேவலை சந்தித்த ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவர்த்தைகளை நடத்தியிருந்தார்.
கடந்த வருடம் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற நிலையில், ஒருவருடத்தின் பின் இந்தியாவுக்கான முதல் விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.