உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தின் 44ஆம் சரத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்யப்பட்ட பங்கு மற்றும் பிணைகள் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் கடன் மறுசீரமைப்பு குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.