பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் அதிகரித்துள்ள பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கென்று இவ்வாறு விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
வீதி சோதனைச் சாவடிகளை அமைத்து தேடுதல் நடவடிக்கை

மேல் மாகாணத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களிலும் தென் மாகாணத்தின் கொஸ்கொட, அம்பலாங்கொட, அஹூங்கல்ல, எல்பிட்டிய, மீட்டியகொட, ஹிக்கடுவ மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலும் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வீதி சோதனைச் சாவடிகளை அமைத்து சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது