ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஹரகம, கட்டுவெல பிரதேசத்தில் இந்தப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின் கீழ் தளத்தில், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை – நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மாணவன் தூக்கில் தொங்குவதை அதிகாலையில் கண்ட சக மாணவர்கள் அவரின் கழுத்து பகுதியில் இருந்த கயிற்றை அகற்றி காப்பாற்ற முயற்சித்த போதும் அவா் ஏற்கனவே உயிரி ழந்திருந்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு சென்ற நீதிபதி உடலை பார்வையிட்ட நிலையில்
உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் மாணவனின் மரணம் தொடர்பில் நுகே கொட பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமையை மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பிரேத பரிசோதனைக்காக சடலம் களுபோவில வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.