கட்டுநாயக்க விமானத்தின் ஊடாக தங்க கடத்தலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக சுங்கப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
அண்மையில் சுங்கப் பிரிவு அதிகாரிகளிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்குள் சட்டவிரோதமான பொருள்களை கொண்டு வரும் போது அவற்றின் பெறுமதியில் மூன்று மடங்கு அபராதமாக விதிக்கப்படும் எனவும் குறைந்தபட்ச அபராதத் தொகை ஒரு இலட்ச ரூபாய் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப் பெறும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே அதிகாரிகள் இந்த அபராதத் தொகையை தீர்மானிப்பார்கள் எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்பு உரிமையை தவறாக பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், தங்கம் உட்பட பல பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்தார்.
இதன் பின்னணியில் தங்க கடத்தலை கட்டுப்படுத்த விமான நிலையத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.