பேருந்து கட்டணங்களை குறைப்பது குறித்து ஜூலை மாதம் ஆராய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற எரிபொருள் கட்டண குறைப்பை அடிப்படையாக கொண்டு பேருந்து கட்டணங்களை குறைப்பது குறித்து ஆராயலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் டீசல் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள கெமுனு விஜயரட்ண ஜூலை 1ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்டண மறு ஆய்வின்போது இந்த நன்மையை பொதுமக்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.