சூடானின் துணை இராணுவப் படையினருடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை சூடானிய இராணுவம் இடைநிறுத்தியுள்ளது.
தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு துணை இராணுவப் படை தவறியுள்ளதாக இராணுவம் குற்றம் சுமத்துகிறது. இதனால் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதாக சூடான் இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவின் அனுசரணையுடன் சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் இப்பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
போர்நிறுத்த விதிகளை இரு தரப்பினரும் மீறியுள்ளனர் என மத்தியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர் எனினும், இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மேசையில் தக்கவைத்திருப்பதற்காக இதுவரை தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
இதேவேளை போர் நிறுத்தத்தை மேலும் 5 நாட்கள் நீடிப்பதற்கு இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர் என மத்தியஸ்தர்கள் நேற்றுமுன்தினம் அறிவித்தனர்.
ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் சூடானில் நடைபெறும் மோதல்களால் குறைந்தபட்சம் 1800 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், சுமார்; 350,000 பேர் சூடானிலிருந்து வெளியேறியுள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.