யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு பகுதியில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நிறை போதையில் இருந்த இளைஞன் திடீரென இரத்த வாந்தி எடுத்துள்ளார். அவரை உறவினர்கள் வைத்தியசாலையில் அனுமதித்த போது, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கசிப்பு அருந்திய நிலையிலையே நிறை போதையில் இரத்த வாந்தி எடுத்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, புங்குடுதீவு பகுதிகளில் சட்டவிரோத மதுபானமான கசிப்பு உள்ளிட்ட போதை பொருள் பாவனைகள் அதிகரித்து உள்ளதாகவும், கசிப்பு உள்ளிட்டவை வன்னி பிரதேசங்களில் இருந்து அங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாவும் , அவ்வாறு கசிப்பை கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டும் தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவ்வூரை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.