கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கான வருகை கொடுப்பனவு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கமைய வழங்காதமையால் பொருளாதார விஞ்ஞாபன விடைத்தாள் மதிப்பிடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆராய்ந்து பார்த்து விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹினி குமாரி சபையில் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்திர் வெள்ளிக்கிழமை (26) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கான வருகை கொடுப்பனவு 2ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்ற வாக்குறுதிக்கமைய ஆசிரியர்கள் அந்த கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். என்றாலும் பொருளாதர விஞ்ஞாபன விடைத்தால் மதிப்பீட்டு நடவடிக்கையை ஆசிரியர்கள் நிறுத்தி இருக்கின்றனர்.
ஏனெனில் 5 நாட்களுக்குள் வருகை கொடுப்பனவாக 15ஆயிரம் ரூபா வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தபோதும் அதனை வழங்காமல், பரீட்சை ஆணையாளர் நாயகம் 10ஆயிரம் ரூபாவே வழங்க முடியும் என தெரிவித்திருக்கிறார்.
இந்த பிரச்சினை காரணமாக விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் இருந்து ஆசிரியர்கள் ஒதுங்கிக்கொண்டிருக்கின்றனர். அதேபோன்று கணிதம். விஞ்ஞான பாட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவும் இலலை. அத்துடன் திங்கட்கிழமை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பிக்க இருக்கப்போகிறது.
ஆனால் மாணவர்களின் மீள் திருத்த பெறுபேறுகள் இன்னும் வெளிவரவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அநீதி தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன என கேட்கிறேன் என்றார்.
இதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதிலளிக்கையில்,
பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகளை உடனடியாக வெளியிடுமாறு பரீட்சை திணைக்களத்துக்கு நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆலாேசனைக்குழு கூட்டத்தின் போது உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கிறோம். என்றாலும் சாதாரண தர பரீட்சை திங்கட்கிழமை இடம்பெற இருப்பதால் தற்போது இது போதுமானதாக இல்லை.
அத்துடன் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைக்காக நாங்கள் வழங்கி வந்த 500ரூபா கொடுப்பனவை 2000ஆயிரம் ரூபாவாக அதிகரித்திருக்கிறோம். 80 கிலாே மீட்டருக்கும் அதிக தூரத்தில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு அதனை 2900 ரூபா வரை அதிகரித்திருக்கிறோம். அதன் 5நாட்களுக்கான முற்கொடுப்பனவு வழங்குவதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஏதாவது மாதம் இருந்தால் திறைசேரியுடன் கதைத்து, அதனை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுப்பேன்.
அதேநேரம் பதில் அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடி இருக்கிறேன். 3மாதங்களுக்குள் அதற்கு தீர்வொன்றை வழங்குவது தொடர்பில் அவர்கள் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர் என்றார்.