Trick-or-treating ல் 12வயது பெண்ணிற்கு கிடைத்தது என்ன தெரியுமா?
கனடா-ஹால்ரன் பிரதேசத்தில் திங்கள்கிழமை இரவு ஹலோவின் trick-or-treating சென்ற 12-வயது பெண் ஒருவருக்கு ஒரு குட்டி பக்காடி றம் போத்தல் கொடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மெயின் வீதிக்கும் ஒன்ராறியோ வீதிக்கும் அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதி வீடொன்றிற்கு பெண் சென்ற போது வீடொன்றில் இவளின் பைக்குள் குடியிருப்பாளர் போத்தல் ஒன்றை போட்டுள்ளனர்.
பெண்ணின் தாயார் பைக்குள் போத்தல் ஒன்றைக் கண்டுள்ளார்.அதற்குள் தெளிவான திரவம் இருந்துள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.
போத்தலின் அடைப்பு தளர்வாக இருந்ததால் சிறிது கசியத்தொடங்கியுள்ளது.
பொலிசார் போத்தலை அடைத்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
திங்கள்கிழமை இரவு trick-or-treating சென்ற பிள்ளைகளின் பைகளை மிகவும் கவனமாக சோதனை செய்யுமாறு பெற்றோர் அறிவுறுத்தப்படுகின்றனர்.