பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவியான புஷ்ரா பீபிக்கு லாகூர் மேல் நீதிமன்றம் இன்று முன்பிணை வழங்கியது.
அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கானின் மனைவிக்கு நீதிமன்றம் முன்பிணை வழங்கியது.
இவ்வழக்கில் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக லாகூர் மேல் நீதிமன்றத்தில் புஷ்ரா பீபி முன்பிணை கோரியிருந்தார்.
இதே வழக்கிலேயே இம்ரான் கான் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புஷ்ரா பீபியின் மனுவை விசாரித்த நீதிமன்றம், மே 23 ஆம் திகதிவரை அவருக்கு முன்பிணை வழங்கியது.
இவ்விசாரணையின்போது புஷ்ரா பீபியுடன் அவரின் கணவர் இம்ரான் கானும் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தார்.
மனுதாரரான புஷ்ரா பீபி, மனு மீதான விசாரணைக்கு உரிய நேரத்தில் நீதிமன்றத்துக்கு வரத்தவறியமைக்காக நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.