மட்டக்களப்பு, நாவற்குடா நொச்சிமுனை 5 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள 34, 750 மில்லி லீற்றர் கசிப்புடன் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எச்எம்.சியாம் தெரிவித்தார்.
இச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிற்குட்பட்ட நொச்சிமுனையில் இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலில் மாவட்ட ரகசிய தகவல் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய போதவஸ்து ஒழிப்பு பிரிவினர் சனிக்கிழமை (13) மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின்போது நாவற்குடா நொச்சிமுனை 5 ஆம் குறுக்குத் தெருவில் நீர்நிலையொன்றினுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த சட்டவிரோத கசிப்பு கொள்கலன்களை பொலிசார் மீட்டுள்ளதுடன் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.