மதுரட்டை, பதியபலல்ல பகுதியில் உள்ள ஆறொன்றில் நீராடிக்கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மதுரட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மதுரட்டை, பிரதேசத்தைச் சேர்ந்த 12 மற்றும் 13 வயதான உறவினர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த இருவரும் நீராடிய நிலையில் ஒருவர் நீரில் மூழ்கிக்கொண்டிருந்தபோது அவரை காப்பாற்ற முற்பட்டபோதே மற்றவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக குறித்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.