புற்றுநோயை கண்டறிய ஸ்மார்ட்போன் போதுமே! அசத்தலான கண்டுபிடிப்பு
இவற்றின் ஊடாக நோய்களை இலகுவாக கண்டறியும் தொழில்நுட்பங்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இவற்றின் வரிசையில் தற்போது புற்றுநோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தினையும் உருவாக்கியுள்ளனர்.
இதற்காக ஸ்மார்ட் கைப்பேசிகளை ஸ்பெக்ரோ மீற்றர் போன்று தொழிற்படக்கூடியவாறு மாற்றியுள்ளதுடன், விசேட அப்பிளிக்கேஷன் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
உடலில் இருந்து பெறப்படும் 8 மாதிரிகளின் ஊடாக புற்றுநோயைக் கண்டறிவற்கு இச் சாதனம் உதவுகின்றது.
இதனால் வைத்தியசாலைகளில் இருப்பது போன்ற அனேகமான உபகரணங்கள் பயன்படுத்தப்படவேண்டிய அவசியம் காணப்படாது.
மேலும் இதன் ஊடாக நோய் பற்றிய 99 சதவீதம் உண்மையான அறிக்கையை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.
இதனை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தவர்களுள் ஒருவரான வாசிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Lei Li கருத்து தெரிவிக்கையில் “நோயாளிகள் தாமாக தம்மை பரிசோதித்துக்கொள்வதற்கும், பின்தங்கிய பிரதேசங்களில் பணிபுரியும் வைத்தியர்களுக்கும் இச் சாதனம் பெரும் உதவியாக இருக்கும்“ என தெரிவித்துள்ளார்.