கொழும்பின் பல பகுதிகளில் இன்று (24) திங்கட்கிழமை மாலை மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. மருதானை உப மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக மின்விநியோக தடையேற்பட்டதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
குறுகிய நேர திருத்தப் பணிகளுடன் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியதாகவும் மின்சார சபை அறித்துள்ளது. கொழும்பின் 02,05,07,08,10,12 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின் விநியோகம் திடீரென துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.