1987ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஆங்கில மொழியில் மாத்திரமே சமர்பிக்கப்பட்டதாகவும், இந்த ஒப்பந்தத்தின் மீதான விவாதத்தில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கருத்துக்களை தெரிவிக்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தமானது ஆங்கில மொழியில் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மொழி பிரச்சினையை எழுப்பி, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மீதான விவாதத்திலிருந்து எதிர்க்கட்சி விலகி நிற்க அல்லது தப்பித்துச் செல்ல முற்படுவதாக ஆளும் கட்சியின் பிரதம கோலாசான் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.