இந்தியாவில் ஒரேநாளில் 10,542 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று 7,633 பேருக்கு கொவிட் உறுதியான நிலையில் இன்று 10,542 ஆக கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொவிட்டிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61,233 லிருந்து 63,562 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொவிட்டிற்கு மேலும் 38 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை 5,31,152 லிருந்து 5,31,190 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,34,859 லிருந்து 4,48,45,401 ஆக அதிகரித்துள்ளது.