ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான கொள்கை முயற்சிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தலைமையிலான சுற்றுலா அமைச்சகத்தின் பிரதிநிதிகள் குழு பெங்களூருவில் நடைபெற்ற 18வது சுற்றுலா உணவக முதலீட்டு மாநாட்டில் கலந்துக்கொண்டிருந்த போதே இந்த விடயம் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது.
உணவக உரிமையாளர்கள், செயல்பாட்டளர்கள், முதலீட்டாளர்கள், நிதியாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், ஆலோசகர்கள் மற்றும் தெற்காசியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவைச் சேர்ந்த பிற தொழில் வல்லுநர்கள் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தனர்.
லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவின் வழிகாட்டுதலின் கீழ் ஜம்மு காஷ்மீரில் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கு தகுந்த கொள்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
இந்த கொள்கை திட்டங்களின் நோக்கம் புதிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதும் ஏற்கனவே உள்ளவற்றை மேம்படுத்துவதும் ஆகும்.
சுற்றுலாத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தனியார் பங்கேற்பு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும்; தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் சுற்றுலாத் துறையானது அதன் செயல்பாடுகளை மேம்படுத்தவும், புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துமாகும்.