வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு, அதை எந்தத் தரப்பும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துமீறிய வழிபாடு
எனினும் அத்துமீறி வழிபடவோ அல்லது வழிபாட்டுச் சின்னங்கள் வைக்கவோ முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வழிபாட்டு உரிமை உண்டு; அத்துமீறி சின்னங்களை வைக்க முடியாது! ஜனாதிபதி ரணில் திட்டவட்டம் | North Buddha Statue Ranil Wickramasighe
மேலும் தெரிவிக்கையில், வடக்கில் மத ரீதியில் அண்மைக்காலத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும்.
அரசியல் இலாபம்
இந்த பிரச்சினைகளை வைத்து அல்லது பிரச்சினைகளை மேலும் தூண்டிவிட்டு எவரும் அரசியல் இலாபம் தேட முயலக்கூடாது.
நீதிமன்ற வழக்கில் ஒரு பிரச்சினை இருந்தால் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
வழிபாட்டு உரிமை உண்டு; அத்துமீறி சின்னங்களை வைக்க முடியாது! ஜனாதிபதி ரணில் திட்டவட்டம் | North Buddha Statue Ranil Wickramasighe
எனினும், வடக்கில் மத ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைகளை வளர விடாமல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நேரில் விரைந்து தீர்வு காண்போம் என குறிப்பிட்டுள்ளார்.