இன்று நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இதன்போது இப்பிரதேசங்களின் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அத்துடன் மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.
அவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யும்போது அப்பகுதிளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கம் காரணமாக கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கிறது.
அதன் அடிப்படையில், இன்று (8) நண்பகல் 12.12 மணியளவில் பெம்முல்ல, திஹாரிய, புப்புரஸ்ஸ, தெரிபஹ, வடினாகல மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது என திணைக்களம் அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.