உலகத்தையே ஈர்க்க போகும் அந்த ஒரு பட்டன்!
தொழில்நுட்பத்தில் புதிய புரட்சிகளை ஏற்படுத்தி தனக்கென தனி முத்திரை பதித்து இருக்கும் நிறுவனம் ஆப்பிள்.
இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் எல்லா பொருட்களுமே உலகளவில் மக்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக டச் பார் அடங்கிய புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப் தற்போது வந்துள்ளது.
இந்த புதிய மேக்புக் ப்ரோக்களின் ஹைலைட்டான தகவலே கடந்த 45 ஆண்டுகளாக கணினிகளில் இருந்து வந்த “Function Key”களை ஆப்பிள் நீக்கியுள்ளது என்பதுதான்!
இதற்கு பதிலாக அந்த இடத்தில் OLED தொடு திரையுடன் கூடிய “Touch Bar” மற்றும் பிங்கர் பிரிண்ட் ஆகிய புதிய வசதிகளை சேர்த்துள்ளது.
இந்த மேக்புக் ப்ரோ 13,15 இன்ச் அளவுகளில் சில்வர் மற்றும் கிரே நிறங்களில் உருவாகியுள்ளது.
இதன் சிறப்பம்சங்கள் : வலைதளத்தில் பிரவுஸ் செய்யலாம், லோகேஷன் தேட முடியும், போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடிட் செய்ய முடியும், ஈமோஜிகளை சேர்க்க முடியும்,16 ஜிபி ராம், முந்தைய மாடலை காட்டிலும் 67% பிரகாசமான் திரை, இரண்டு மடங்கு இதைல் வேகமாகும்