கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்,ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அணியை 81 ஓட்டங்களால் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணியின் ஆரம்ப ஆட்டக்காரரான ரஹமதுல்லா குர்பாஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
வெங்கடேஷ் ஐயர், மந்தீப் சிங், நிதிஷ் ரானா, ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர். இதனால் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுக்கு 89 ஓட்டங்களை எடுத்து திணறியது.
அடுத்து இறங்கிய ரிங்கு சிங், ஷர்துல் தாக்குர் ஜோடி பெங்களூர் அணியின் பந்து வீச்சை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். குறிப்பாக, ஷர்துல் தாக்குர் 20 பந்தில் அரை சதமடித்து அசத்தினார். அவருக்கு ரிங்கு சிங் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 103 ஓட்டங்களை குவித்தது. ரிங்கு சிங் 32 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 46 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார். அதிரடியில் மிரட்டிய ஷர்துல் தாக்குர் 29 பந்தில் 3 சிச்கர், 9 பவுண்டரி உள்பட 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 204 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து, 205 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் களமிறங்கியது.
இந்நிலையில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.
205 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி, 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.