நேட்டோவில் பின்லாந்து இணைவது ரஷ்யாவின் பாதுகாப்பு மீதான ஒரு தாக்குதல் என ரஷ்யா விமர்சித்துள்ளது.
ரஷ்யாவுடன் எல்லையைக் கொண்டுள்ள பின்லாந்து, நேட்டோவில் இன்று உத்தியோகபூர்வமாக இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ், செய்தியாளர்களிடம் பேசுகையில், இது சூழ்நிலையை புதிய சிக்கல் என கிரம்ளின் நம்புகிறது எனக் கூறியுள்ளார்.
நேட்டோவை விஸ்தரிப்பது எமது பாதுகாப்பினதும் ரஷ்யாவின் தேசிய நலன்களின் மீதுமான ஒரு தாக்குதல்.
பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இது எம்மை நிர்ப்பந்திக்கிறது எனவும் அவர் கூறினார்.