துனீஷியா கடற்பகுதியில் இரு படகுகள் கவிழ்ந்ததால் குறைந்தபட்சம் 29 குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளனர்.
ஆவணங்களற்ற ஆபிரிக்கக் குடியேற்றவாசிகளை தடுப்பத்றகான நடவடிக்கைகளை துனீஷிய அரசாங்கம் ஆரம்பித்த பின்னர் இப்படகுகள் கவிழ்ந்துள்ளன.
இதேவேளை, இத்தாலியின் லம்பேதுசா தீவுக்கு 24 மணித்தியாலங்களில் 2500 குடியேற்றவாசிகள் வந்துள்ளனர் என இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிக்கும் குடியேற்றவாசிகளுக்கான ஒரு நிலையமாக துனீஷியா உள்ளது. இவ்வருடம் குறைந்தபட்சம் 12,000 பேர் துனீஷியாவிலிருந்து இத்தாலிய கரையோரங்களை சென்றடைந்தள்ளதாக புள்ளிவபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் இதே காலத்தில் இந்த எண்ணிக்கை 1,300 ஆக இருந்தது.