மைக்ரோசொஃப்டின் சத்யா நாதெள்ளா, ஆல்பாபெட்டின் சுந்தர் பிச்சை மற்றும் ஐ.பி.எம்., அடோப், பாலோ ஆல்டோ நெட்வொர்க், வி.எம்.வேர், விமியோ ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர்.
இது குறித்து பூட்டான் நேரலை செய்திச் சேவை தெரிவித்துள்ளதாவது,
புள்ளிவிபரங்களின்படி, இந்தியாவில் பிறந்த பலர் தொழில்நுட்பத்துறையில் தலைமை நிர்வாக அதிகாரிகளாகவும், அமெரிக்காவில் செல்வந்தவர்களாகவும், அதிகம் படித்தவர்களாகவும் உள்ளனர்.
70 வீதத்துக்கும் அதிகமான எச்-1பீ விசாக்கள் மற்றும் அமெரிக்காவால் வழங்கப்படும் வெளிநாட்டினருக்கான பணி அனுமதிகள் இந்திய மென்பொருள் பொறியியலாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
மேலும், சியாட்டில் போன்ற நகரங்களில் உள்ள பொறியியலாளர்களில் 40 வீதமானவர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சமீபத்தில் யூடியூப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.
பெரும்பாலான நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து வருகிறார்கள். இது 2 சதவீதத்துக்கும் குறைவாக ஏற்றுக்கொள்ளும் விகிதத்தைக் கொண்டுள்ளது. உயர்மட்ட இந்திய திறமைசாலிகள் மட்டுமே அங்கு சேர்க்கப்படுகிறார்கள்.
இது அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த இந்திய பொறியியலாளர்களின் திறமையை பற்றிய கணிப்பாக உள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தும் ஒரு நல்ல கல்வி முறையை இந்தியா கொண்டுள்ளது என குறிப்பிடுகிறது.