இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் மொத்த விலை 30 ரூபாவினாலும் பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விலை 40 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெள்ளைச் சீனி மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விலை குறைப்பின் பயனை நுகர்வோர் பெற வேண்டும் என்று புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோ சீனிக்கான இறக்குமதி வரி 50 ரூபா 25 சதமாக குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்துக்கு 7,000 கோடி ரூபா வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.