கனடாவில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை: தலைமை பொது சுகாதார பிரிவு கவலை

கனடாவில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை: தலைமை பொது சுகாதார பிரிவு கவலை

கனடாவில் நாளொன்றிற்கு 230இற்கிற்கும் மேற்பட்ட கனடியர்கள் குடும்ப வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக கனடாவின் தலைமை பொது சுகாதார பிரிவு கவலை வெளியிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு குடும்ப வன்முறை – பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் நிதி முறை கேடு அத்துடன் புறக்கணிப்பு, ஆகிய விடயங்களை கருத்தில் கொண்டு பொது சுகாதார பிரிவினால் மேற்கொண்ட புள்ளிவிபரவியல் கணிப்பிலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

டாக்டர் கிரெகரி ரெய்லரினால் மேற்கொண்ட குறித்த புள்ளிவிபரவியல் கணிப்பு படி,

2014ஆம் ஆண்டு 57,835 பெண்கள் மற்றும் மகளிர் குடும்ப வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நான்கு நாட்களில் ஒரு பெண் குடும்ப அங்கத்தவர் ஒருவரால் கொல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு மூன்றில் ஒரு பங்கு கனடியர்கள், 9மில்லியன் மக்கள் தாங்கள் 15வயதாக முன்னர் கொடுமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து வருட காலத்தில் 760,000 கனேடியர்கள் ஆரோக்கியமற்ற திருமண முரண்பாடு அல்லது வன்முறைகளினால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. தினமும் எட்டு வயோதிபர்கள் குடும்ப வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

குடும்ப வன்முறைகள் உடனடி உடல் காயங்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி பல நிலைமைகளில் ஆபத்தை விளைவிக்கின்றது. மன அழுத்தம், கவலை, பிந்திய மன உழைச்சல் சீர்கேடு மற்றும் உயர் ரத்த அழுத்தம் புற்றுநோய் இருதய நோய் என்பன அடங்கும் என ரெய்லர் குறிப்பிட்டுள்ளார்.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News