அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் சர்வதேச பிரச்சார நடவடிக்கையொன்றை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.
சர்வதே அளவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் நியாயமற்ற முறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யவேண்டும்என வேண்டுகோள் விடுக்கும் என்ற பிரச்சார இயக்கத்தை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.
மனித உரிமைகளிற்காக சர்வதேச பிரகடனம் தெரிவிப்பது போல சர்வதேச அளவில் ஒவ்வொரு பிரஜையும் கருத்து சுதந்திரம் வெளிப்பாட்டு சுதந்திரம் அமைதியான விதத்தில் ஒன்கூடும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைகளிற்கு உரித்தானவர்கள் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனைத்து பகுதிகளிலும் உள்ள சாதாரண மக்களும் இந்த பிரச்சார முயற்சிக்கு ஆதரவளிக்கவேண்டும் எனவும்; அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுக்கின்றது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களின் உலகளாவிய தன்மையில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க அமெரிக்கா அழைப்புவிடுக்கின்றது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
உங்கள் செயல்களிலும் உங்கள் குரல்களிலும் சக்தி இருக்கின்றது இந்த கைதிகளை விடுவிக்கவும் மனித உரிமை மீறல்களை குறைக்கவும் நீங்கள் உதவலாம்எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.