பிரேஸிலின் பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில், முன்னாள் நீதியமைச்சரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அண்டர்சன் டொரெஸ் இன்று கைது செய்யப்பட்டார்.
தலைநகர் பிரசிலியாவிலுள்ள ஜூசேலினோ குபிட்ஸ்செக் விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பிரேஸில் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபத் தேர்தலில் தோல்வியுற்ற ஜெய்ர் போல்சனரோவின் ஆதரவாளர்கள், கடந்த 9 ஆம் திகதி பிரேஸில் பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, உச்சநீதிமன்ற கட்டடங்களுக்குள் புகுந்து தாக்குதல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ தோல்வியுற்றார். முன்னாள் ஜனாதிபதி லூலா டி சில்வா வெற்றி பெற்றார். கடந்த முதலாம் திகதி அவர் ஜனாதிபதியாக பதவியேற்றார். ஆனால், போல்சனரோ தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தலைநகர் பிரசிலியாவிலுள்ள பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, மற்றும் உச்சநீதிமன்றத்தை கடந்த சனி, ஞாயிறு தினங்களில் முற்றுகையிட்டனர்.
கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள், 2021 ஜனவரி 6 ஆம் திகதி அமெரிக்க பாராளுமன்றத்தின் மீது நடத்திய தாக்குதல்களை நினைவுபடுத்துதும் விதமாக இச்சம்பவம் இருந்தது.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இத்தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
புதிய ஜனாதிபதியாக லூலா டி சில்வா பதவியேற்பதற்கு முன்னர் அமெரிக்காவுக்கு சென்றவிட்டிருந்த ஜெய்ர் போல்சனரோவும் வன்முறைகளை தான் கண்டிப்பதாக தெரிவித்திருந்தார்.
ஜெய்ர் போல்சனோவின் கீழ், பாதுகாப்பு அமைச்சகராவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகித்த அண்டர்சன் டெரஸை, இத்தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யுமாறு பிரேஸில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அண்டர்சன் டெரஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.