பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அதிர்ச்சியான செய்தி
அதாவது கைப்பேசிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் அனைத்து கைப்பேசி இலக்கங்களையும் சேகரித்துள்ளது.
அத்துடன் நின்றுவிடாது சேகரிக்கப்பட்ட கைப்பேசி இலக்கங்களுள் பேஸ்புக் கணக்கு அற்ற இலக்கங்களை தேர்வு செய்து அவ் இலக்கங்களின் உரிமையாளர்களுக்கு பேஸ்புக் கணக்கினை உருவாக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கின்றது.
அண்மையில் வாட்ஸ் அப் கணக்கில் பயன்படுத்தப்படும் கைப்பேசி இலக்கங்கள் உட்பட சில தகவல்களை திரட்டி பேஸ்புக்கில் பயன்படுத்தவுள்ளதாக அந் நிறுவனம் வெளிப்படையாகவே அறிவித்திருந்தது.
எனினும் இச் செயற்பாட்டிற்கு சில நாடுகளில் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்ததுடன் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே தற்போது பேஸ்புக் கணக்குகளை ஆரம்பிக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது.
அவ்வாறு நண்பர் ஒருவரினால் கோரிக்கை விடப்படும்போது குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
அக் குறுஞ்செய்தியைப் பயன்படுத்தி பேஸ்புக் கணக்கினை உருவாக்கிய பின்னர் குறுஞ்செய்தி அனுப்பியவருக்கு தானாகவே Friend Request அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.