அஜித், விஜய் சாதனையை முறியடித்த காஷ்மோரா கார்த்தி
கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக காஷ்மோரா படம் தீபாவளிக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே படத்திற்கான எதிர்ப்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துவிட்டது.
இந்நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு என உலகம் முழுவதும் 1700 திரையரங்குகளில் வெளிவருகிறதாம். சமீபத்திய விஜய், அஜித் படங்களின் திரையரங்க எண்ணிகையை விட அதிகம்.
இதற்கு முக்கிய காரணம் கார்த்திக்கு தெலுங்கில் மார்க்கெட் இருப்பதால் ஆந்திரா தெலுங்கானாவில் நேரடி தெலுங்கு படத்திற்கு இணையாக ரிலிஸ் ஆகவுள்ளதாம்.
இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிக்க, விவேக் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.