இடைத்தேர்தலில் போட்டியிடும் 19-வயது வாலிபன்!
கனடா-நயாகரா வோல்ஸ், ஒன்ராறியோ.—19வயது பல்கலைக்கழக மாணவன் ஒருவன் முற்போக்கு பழமைவாதிகள் கட்சியின் தலைவரை வென்று எதிர்வரும் இடைத்தேர்தலில் போட்டியிட வெற்றி பெற்றுள்ளான்.
Sam Oosterhoff நயாகரா மேற்கு-கிளான்புறூக் தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு வெற்றி பெற்றுள்ளான்.
இந்த வெற்றிடம் முன்னாள் கட்சி தலைவர் ரிம் குடாக் கடந்த மாதம் ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஏற்பட்டது. இதற்கான இடைத்தேர்தல் நவம்பர் மாதம் 17ல் இடம்பெறுகின்றது. ஓட்டாவா-வனியர் தொகுதிக்கான இடைத்தேர்தலும் அன்றய தினம் நடைபெறும்.
கட்சியின் தலைவர் மற்றும் முன்னான் எம்பி றிக் டைக்ஸ்ரா அத்துடன் பிராந்திய கவுன்சிலர் ரொனி குயிர்க் ஆகியோரின் வேட்பு மனுத்தாக்குதல்களிற்கு எதிராக நின்று Oosterhoff வெற்றி பெற்றுள்ளான்.
Oosterhoff புறொக் பல்கலைக்கழக மாணவன். பாராளுமன்ற ஹில்லில் ஒரு சட்டமன்ற உதவியாளராக பணிபுரிந்துள்ளான்.
PC தலைவர் பற்றிக் பிறவுன் இந்த இடைத்தேர்தல் “மாற்றத்திற்கான சாதகமான செய்தி” ஒன்றை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு என தெரிவித்துள்ளார்.