சிலர் ஊடகம் என சொல்லிக் கொண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டு குறைபடுதலும் குழப்புதலுமாக உள்ளமையை காண்கிற போது மிகவும் கவலையாக இருக்கின்றது.
முதலில் நாம் ஒரு நிகழ்வுக்கு செல்லுகின்ற போது அதற்குத் தகுந்தாற் போல உடை அணிய வேண்டும். அதன் வழியாக நாம் பண்டையும் பண்பட்ட தொடர்பாடலையும் செய்கிறோம்.
அதுபோல படப்பிடிப்பாளர்கள் என்று சிலர் வருகின்ற போது நிகழ்வுகளில் சத்தமாக பேசுவது, மரியாதை இன்றி பேசுவது, நிகழ்வுகளின் குறுக்கே செல்லுதல் போன்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபடுவதும் வருத்தம் தருகிறது.
போகின்ற இடத்தில் போகின்ற வேலையை செய்யாமல் தேவையற்ற வகையில் செயற்படுதலை நாம் தவிர்க்க வேண்டும். இதனால் நிகழ்வை செய்பவர்கள் வெளியேற்றுகின்ற அவமரியாதை நிலையை தவிர்க்கலாம் அல்லவா?
எங்கள் எங்கள் மரியாதையை நாமே காப்பாற்ற வேண்டும். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று சொல்வார்கள். குறிப்பாக ஊடகவியலாளர்கள் மற்றும் படப்பிடிப்பு பணியில் ஈடுபடுகின்ற நாம் இதில் அக்கறையாய் இருந்து பிறரின் முகச் சுழிப்பை தவிர்ப்போம்.
கிருபா பிள்ளை