இராணுவ புரட்சி சதியில் கோத்தபாய..!! – சாதூர்யமாக தடுக்கும் ஜனாதிபதி!
ஏற்கனவே இலங்கையில் இராணுவ புரட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக பல்வேறுபட்ட கருத்துகள் கூறப்பட்டு வந்தன அதனை வலியுருத்தும்விதமாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தார்.
நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்படாது என்று விட்டு விட முடியாது, முன்னைய பாதுகாப்பு செயலாளர் தற்போதும் உள்ளார் அவர் பல்வேறு விதமான கருத்துகளையும் வெளிப்படுத்திக் கொண்டும் வருகின்றார்.
ராஜபக்சர்களுக்கு இராணுவத்தினர் இடையே மிகுந்த செல்வாக்கு உள்ளது. அவர்களுக்கு சேவை செய்தவர்கள் தற்போதும் பணியில் இருக்கின்றார்கள்.
தற்போது இராணுவத்தினரை பற்றி கூறப்படும் கருத்துகள் காரணமாக ராஜபக்சர்கள் ஆட்சி செய்த காலத்தில் எமக்கு இவ்வாறு நிகழவில்லை என இராணுவத்தினர் எண்ணிவிட முடியும் அது இராணுவ புரட்சிக்கும் வழிவகுக்க ஏதுவாக அமையும்.
இவை ராஜித சேனாரத்ன கூறிய கருத்துகள். இந்தக் கருத்துகள் கோத்தபாய தலைமையில் இராணுவ புரட்சி திட்டமிடப்படுகின்றது. என்பதை வலுப்படுத்தும் கருத்துகளாகவே அமைகின்றது என தென்னிலங்கை புத்திஜூவிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் எமது ஆட்சி காலத்தில் இராணுவத்தினருக்கு இவ்வாறான அவல நிலை தோன்ற வில்லை என அனைத்து இடங்களில்உரையாற்றும் போதும் மஹிந்த தரப்பு தற்போது சொல்லிக் கொண்டே வருகின்றது.
இவை மூலம் மெது மெதுவாக இராணுவம் திசை திருப்பப்பட்டு கொண்டே வருகின்றது என்றே கூறவேண்டும்.
அதே சமயம் தற்போது நிகழும் இந்த செயற்பாடுகள் இராணுவம், ஆட்சிக்கு எதிராக திசை திரும்புவதனை மாற்ற முடியுமாக இருக்கின்றது. அதனால் இந்த வலிகளை தாங்கிக்கொள்ளவேண்டும் எனவும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சுதந்திரக்கட்சி கூட்டங்களுக்கு மற்றும் கூட்டு எதிர்க்கட்சி கூட்டங்களுக்கும் ஒன்றாக செல்லாத மஹிந்த கோத்தபாய இருவரும் கமால் குணரத்னவின் புத்தக வெளியீட்டிற்கு அதி முக்கியத்துவம் கொடுத்திருந்தமையும் அண்மையில் அவதானிக்கப்பட்ட விடயமே.
அதேபோன்று ராஜிதவின் கருத்துகளுக்கு மறுப்பு வெளியிட்ட மஹிந்த முக்கியமாக இராணுவ புரட்சி பற்றி அவர் கூறியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை. அதற்கு காரணம் அதனை மீண்டும் கூற முற்படும் வேளை அது பெரிதாகிவிடும் என்பதே எனவும் கூறப்படுகின்றது.
இவற்றினை தொகுத்து நோக்கும் போது நாட்டில் குழப்பம் ஏற்படுத்த இராணுவம் முயற்சித்து வருவதாகவும் அதன் பின்னணியில் கோத்தபாய மஹிந்த இருப்பதாகவும் வெளிப்படையாக தெரிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதே சமயம் இந்த சூழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி அறிந்த காரணத்தினாலேயே அவர் இராணுவத்திற்கு அதி முக்கியத்தினை கொடுத்து வருகின்றார் எனவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதியும் அண்மைக்காலமாக, “இராணவம் எனக்கு அதி முக்கியம் அதனை ஒருபோதும் நான் விட்டுக்கொடுக்கமாட்டேன்” எனவும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் நாட்டில் இராணுவ ஆட்சி முறையினை கொண்டுவருவதற்கு மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய போன்றோர் செயற்பட்டு வருவதாகவும் அதனை மைத்திரி சாதூர்யமாக தடுத்தும் வருகின்றார் என்பதே உண்மை.
மேலும் அன்றாடம் இராணுவத்திற்கு கொடுக்கப்பட்டு வரும் ஆட்சிக்கு எதிரான கருத்துகளோடு இந்தியா மறைமுகமாக இராணுவ புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்தவண்ணமே இருக்கின்றது.
இவை இலங்கையில் இராணுவ புரட்சி ஏற்படும் சாத்தியக் கூறுகளை வலுப்படுத்துகின்றது. நல்லாட்சி ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தென்னிலங்கை புத்திஜூவிகள் தெரிவித்துள்ளனர்.