2022ஆம் ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், பிரபலமான படங்கள், பிரபலமான நட்சத்திரங்கள், அதிகம் சாப்பிடப்பட்ட உணவு என பல பட்டியல்கள் வெளிவந்துக்கொண்டிருக்கிறது.அந்த வகையில் 2022ஆம் ஆண்டு அதிகமாக கூகுளில் தேடப்பட்ட ஆசிய பிரபலங்கள் யார் யார் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.அதில் நடிகர் விஜய் 15வது இடத்தில் இருக்கிறார். 3வது இடத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, 4வது இடத்தில் பொலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் ஆகியோர் உள்ளனர்.ஆனால் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது யார் தெரியுமா?
கூகுளில் அதிகமாக தேடப்பட்ட ஆசிய பிரபலங்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிஎஸ் நட்சத்திரங்கள் தட்டி சென்றுள்ளனர்.முதலிடத்தில் பிடிஎஸ் நாயகன் வி என்கிற கிம் டேஹ்யுங் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ஜுங்குக் என்கிற மற்றொரு பிடிஎஸ் பிரபலம் இருக்கிறார்.
யார் இந்த பிடிஎஸ்?2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பேங்டன் போய்ஸ் என்கிற இந்த இசைக்குழு பிடிஎஸ் என்று பிரபலமாக அறியப்படுகிறது.தென் கொரியாவை சேர்ந்த 7 பேர் கொண்ட இந்த இசைக்குழு பல தரப்பட்ட இசை, மற்றும் பாடல்களை பாடி, உலகளவில் ரசிகர்களை சம்பாதித்திருக்கிறது.இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் மெண்டல் ஹெல்த் தொடர்பான பிரச்னைகள், பள்ளிப் பருவத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள், தனித்துவம் (Individualism), இழப்பு போன்ற விஷயங்களை பாடல்கலாக எழுதி இவர்கள் வெளியிடும் ஆல்பங்கள் இளம் தலைமுறையினரை வெகுவாக ஈர்த்தது.
இந்நிலையில், அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளனர் இந்த இசைக்குழுவை சேர்ந்த வி மற்றும் ஜுங்குக்.மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்திய பிரபலங்கள் தவிர, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, தமன்னா, ஜான்வி கபூர், நடிகர்கள் ஷாருக் கான், சல்மான் கான், தென்னிந்திய நட்சத்திரங்களான ரஜினிகாந்த், சூர்யா, தனுஷ் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.