சமஷ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் அது இலங்கையில் தமிழ், சிங்கள மக்களையும் பாதிக்காது நாட்டை சரியாக கொண்டு செல்லும் என தந்தை செல்வா 1948 ஆம் ஆண்டிலே விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (டிச. 18) கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசு கட்சியின் 75 ஆவது ஆண்டு ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையற்றுகையில் தமிழர்களது சுதந்திரத்தை பறித்து அவர்களின் இறமையை பறித்து இலங்கையில் தமிழர்களது உரிமைகளையும் சேர்த்து பிரித்தானிய அரசால் இலங்கைக்கான சுதந்திரமாக 1948ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
அதற்கு எதிராக அந்த அநியாயங்களுக்கு எதிராக ஒரு விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தவர் தந்தை செல்வா 1948இல் முதலாவது களம் அமைக்கப்பட்டு தமிழர்களுக்கான ஒரு அரசு வேண்டும் அந்த அரசு எவ்வாறு அமைய வேண்டும் என்ற ஒரு தீர்க்கதரிசன சிந்தனையோடு தனது பயணத்தை ஆரம்பித்தார்.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் என்றால் எங்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகின்றது எனவேதான் இரண்டும் சமதராசில் வைத்து பார்க்கப்பட வேண்டிய விடயங்களாக நோக்கப்படுகின்றது.
மிக முக்கியமாக தந்தை செல்வாவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் 1949ஆம் ஆண்டிலேயே தமிழரசு கட்சியின் பதிவுகளுக்கான அங்குரார்பன நிகழ்வில் அவர் ஆற்றிய உரை இலங்கையில் ஒரு சமஸ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும். அது இலங்கையில் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பாதிக்காது.
இந்த சமஷ்டி தீர்வானது சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் காப்பாற்றிக் கொள்ளும் ஒரு தீர்வாக சமஷ்டி அமையும் என்ற வார்த்தைகளை குறிப்பிட்டிருந்தார்.
அவர் இந்த இனம் பற்றி சிந்தித்து இனம் பற்றிய கொள்கைகளில் வழி நடந்ததால் தான் இன்றும் அவர் எங்கள் மனங்களிலே நிறைந்தவராக இருக்கின்றார் எங்களுடைய இலக்கு நோக்கிய பயணம் சவால் நிறைந்ததாக அமைந்துள்ளது.
நாங்கள் எந்த மண்ணில் இருந்து எங்களுடைய உரிமைகளுக்காக பேசினோமா செய்திகளை சொன்னமோ அதை அந்த இடத்தில் இருந்து இந்த வீர மண்ணிலே இருந்து நாங்கள் இந்த பவள விழாவுக்கான தொடக்கத்தை ஆரம்பித்திருக்கின்றோம் அதுதான் அதற்கான அடிப்படை காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்