நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நிர்ணயம் செய்துள்ள முட்டைக்கான புதிய அதிகபட்ச விலையினையும் ஏற்றுக்கொள்ள முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
இன்று (15) மேன் முறையீட்டு நீதிமன்றில் முட்டை விற்பனை தொடர்பில் கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயம் செய்து அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு 2 ஆவது நாளாக பரிசீலிக்கப்பட்ட போது இந்த ஆட்சேபனை முன் வைக்கப்பட்டது.
முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சொய்ஸா இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார்.