இங்கிலாந்து வீரருக்கு சதி செய்த நடுவர் தர்மசேனா: சர்ச்சையை கிளப்பும் வீடியோ
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து- வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சிட்டாகாங்கில் நடந்து வருகிறது.
இதில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 293 ஓட்டங்களும், வங்கதேசம் 248 ஓட்டங்களும் எடுத்தன.
இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 228 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடும் போது அதிகமான தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
சாகிப் அல் ஹசன் ஓவரில் மொயீன் அலிக்கு மட்டும் நடுவர் தர்மசேனா 3 தவறான தீர்ப்புகளை வழங்கினார். இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இது குறித்து மொயீன் அலி கூறுகையில், இந்த ஆடுகளம் நடுவருக்கு சற்று கடினமாக உள்ளது. ஆனால் இதை என்ன சொல்வது என்று தெரியவில்லை. தர்மசேனா எனக்கு 3 முறை அவுட் கொடுத்துவிட்டார் என்றார்.