பிரதம மந்திரி மீது பூசணி விதைகளை வீசிய பெண்!
கனடா-ஹமில்ரனில் பெண் ஒருவர் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ருடோ மீது பூசணி விதைகளை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டு இன்று ஆர்சிஎம்பியினரால் விசாரனக்குட்படுத்தப்பட்டார்.
ஹமில்ரன் மேயருடன் நகர மண்டபத்தில் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு விட்டு திரும்புகையில் “Keep your promises!” என கத்தியவாறு விதைகளை அவர் மீது வீசியுள்ளார்.
அப்பெண் உடனடியாக பாதுகாவலரால் தரையில் தடுக்கப்பட்டார்.
சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக இப்பெண் புதிய குழாய் அமைப்புகள் தேவையில்லை என்ற சுலோகம் கொண்ட பதாகை ஒன்றை தாங்கிய வண்ணம் காணப்பட்டுள்ளார்.
இவர் மீது குற்றம் சுமத்தப்படுமா என்பது தெரியவரவில்லை.