ஆபத்தான பல நிலைமைகளை அதிகரிக்கும் குடும்ப வன்முறை!
கனடா-நாளொன்றிற்கு 230-ற்கிற்கும் மேற்பட்ட கனடியர்கள் குடும்ப வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிசாருக்கு அறிவிக்கப்படுவதாக கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
டாக்டர் கிரெகரி ரெய்லரின் 2016ன் குடும்ப வன்முறை- பாலியல் உட்பட்ட உணர்ச்சி ரீதியான மற்றும் நிதி முறை கேடு அத்துடன் புறக்கணிப்பு-போன்றனவற்றை கருத்தில் கொண்டு பொது சுகாதார பிரிவினால் கணிக்கப்பட்ட அறிக்கை இத்தகவலை வெளியிட்டுள்ளது.
ரெய்லரின் புள்ளிவிபரவியல் கணிப்பு:
தினமும் 230கனடியர்களிற்கும் மேற்பட்டவர்கள் குடும்ப வன்முறைகளினால் பாதிக்கப்படுகின்றனர்.
2014-ல் 57,835 பெண்கள் மற்றும் மகளிர் குடும்ப வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு 10சம்பவங்களில் 7மட்டுமே அறிவிக்கப்பட்டவை.
ஒவ்வொரு நான்கு நாட்களில் ஒரு பெண் குடும்ப அங்கத்தவர் ஒருவரால் கொல்லப்படுகின்றார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மூன்றில் ஒரு பங்கு கனடியர்கள்-9மில்லியன் மக்கள் தாங்கள் 15வயதாக முன்னர் கொடுமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து வருட காலத்தில் 760,000கனடியர்கள் ஆரோக்கியமற்ற திருமண முரண்பாடு அல்லது வன்முறைகளினால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
தினமும் எட்டு வயோதிபர்கள் குடும்ப வன்முறைக்கு உட்படுத்த படுகின்றனர்.
குடும்ப வன்முறைகள் உடனடி உடல் காயங்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி பல நிலைமைகளில் ஆபத்தை விளைவிக்கின்றது. மன அழுத்தம், கவலை, பிந்திய-மன உழைச்சல் சீர்கேடு மற்றும் உயர் ரத்த அழுத்தம் புற்றுநோய் இருதய நோய் என்பன அடங்கும் என ரெய்லர் எழுதியுள்ளார்.
சுகாதார நிபுணர்கள் ஆய்வாளர்கள் மற்றும் சமூகங்கள் பாடுபட்டும் ஏன் குடும்ப வன்முறைகள் இடம்பெறுகின்றன அல்லது தலையிடுவதற்கு சிறந்த வழி என்ன என்பன குறித்து இதுவரை எவருக்கும் புலப்படவில்லை.