ஐ.எஸ். சந்தேகநபரின் கத்திக் குத்துக்கு இலக்கான பொலிஸ் அதிகாரிகள்
ஐ.எஸ். ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் நபரின் கத்தி குத்துக்கு இலக்காகி இரு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்த சம்பவம் இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதல் இன்று (வியாழக்கிழமை) காலை சம்பவித்துள்ளது.
தாக்குதல்தாரி பொலிஸாரினால் சுடப்பட்ட நிலையில், காயமடைந்துள்ளதாகவும், அவர் ஐ.எஸ் ஆதரவாளராக இருக்கலாம் என சந்தேகிக்கின்ற நிலையில், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, உலகின் முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட ஒரு நாட்டில் இவ்வாறு தீவிரவாதம் எழுச்சி பெறுகின்றமை கவலையளிப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.