இன்று முதல் 100,000க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு கப்பல்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் சந்தைக்கான எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
எரிவாயு ஏற்றிய கப்பல்கள் தற்போது இலங்கை கடற்பரப்பை நெருங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.