கருணைக்
கிழங்கு தரைதட்டி
விட்ட அரிசிப்பானைக்குள் வெயில் விழுந்து விட்டது.
காலிப்
பானைக்குள் சோற்றின்
வாசம் தீரவில்லை,
இருந்த இடத்திற்கு அவ்வாசத்தை வழங்கி விட்டுத்தான் போகுமென்
குனிந்து மதிய வெயிலில் தாய்மார்
நட்ட சோழவந்தான்
ஆற்றுநீர் அரிசி,
அரிசிப்பானையில்
வாசம் பிடித்த மயக்கத்தில் வெளியேற முடியாமல் தவிக்கிறது
இரை தேடி உள்ளே நுழைந்த
எறும்புக்கூட்டம்.
சீனு ராமசாமி