இதயத்தில் பிரச்சனை! உலகமே வியந்து பார்க்கும் ஏழைச் சிறுவன் ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ பிப்ரவரி 5, 1985ம் ஆண்டு பிறந்தார்.
அவருக்கு மூன்று உடன்பிறப்புகள் இருந்தன,அதில் ரொனால்டோ தான் கடைக்குட்டி. அப்போது அவரது குடும்பம் மிக மோசமான பொருளாதார சுழலில் இருந்தது.
கடற்கரையில் ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்து வந்துள்ளனர். ரொனால்டோவின் தாய் துப்புரவு மற்றும் சமையல்காரராக பணியாற்றியுள்ளார்.
சிறுவயதிலே ரொனால்டோவுக்கு கால்பந்து விளையாட்டின் மீது மோகம் இருந்தது. அவர் சிறந்த கால்பந்து வீரராக திகழ்வார் என பெற்றோர் உணர்ந்துள்ளனர்.
கடந்த 2005ம் ஆண்டு தொடர் குடியால் ரொனால்டோவின் தந்தை சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்துள்ளார்.
தந்தையில் இழப்பால் பெரிதும் பாதித்த ரொனால்டோ, தனது பத்து வயதில் the Andorinha கால்பந்து அணி வீரராக திகழ்ந்துள்ளார்.
ஆண்டுகள் செல்லச் செல்ல ரொனால்டோ பல சாதனைகளை உடைக்க தொடங்கியுள்ளார்.
15 வயதில் ரொனால்டோவுக்கு இதய பிரச்சனை இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு அறுவை சிகிச்சைக்கு பின் அவர் மீண்டு வந்துள்ளார்.
17 வயதில் பிரபலமான ஐரோப்பிய கிளப் அணியின் உறுப்பினராக இணைந்ததை தொடர்ந்து ரொனால்டோவின் வாழ்க்கை மாற்றம் அடைந்துள்ளது.