இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஸ்க குணதிலகவினால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பெண் இணைய வழி துன்புறுத்தலிற்குள்ளாகியுள்ளார் என்ற தகவல் சிட்னி நீதிமன்றில் இன்று வெளியாகியுள்ளது.
31 வயது குணதிலக கடந்த நவம்பர் ஆறாம்திகதி கைதுசெய்யப்பட்டது முதல் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
பெண்ணொருவர் மேற்கொண்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பாலியல் குற்றங்கள் தொடர்பான பிரிவின் புலனாய்வாளர்கள் இலங்கை வீரருக்கு எதிராக பாலியல் வனமுறை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
இன்று டவுனிங் சென்டர் உள்ளுர் நீதிமன்;றத்தில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் தனுஸ்ககுணதிலகவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பிணை நிபந்தனைகளின் ஒரு பகுதியாக இலங்கை வீரர் ஒவ்வொருநாளும் ஈஸ்வூட் காவல்நிலையத்திற்கு சென்று கையெழுத்திடவேண்டியிருக்கும் மேலும் அவர் தனது கடவுச்சீட்டை ஒப்படைக்கவேண்டும்.
தனுஸ்க டின்டர் அல்லது வேறு எந்த டேட்டிங் செயலியையும் பயன்படுத்தக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனுஸ்க குணதிலக சட்டபிரதிநிதியொருவரின் முன்னிலையிலேயேஅதனை பயன்படுத்த முடியும்.
தனுஸ்கவிற்கு பிணை வழங்கினார் அவர் பாதிக்கப்பட்டவரிற்கு பாதிப்பை ஏற்படுததுவார் என குறிப்பிடப்படவில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 29ம் திகதி தனுஸ்க குலதிகவும் குறிப்பிட்ட பெண்ணும் டேட்டிங் செயலியில் சந்தித்துள்ளனர் 2ம் திகதி சந்திக்க இணங்கியுள்ளனர் என்ற தகவல் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளது.
சிட்னி சிபிடியில் இருவரும் மது அருந்தியுள்ளனர் அதன் பின்னர் குறிப்பிட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர் பின்னர் தனுஸ்க குறிப்பிட்ட பெண்ணை பல தடவை பாலியல் வன்முறைக்குள்ளாக்கியுள்ளார் என்ற தகவலும் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளது.
தனுஸ்க ஒரு கட்டத்தில் பெண்ணிற்கு மூச்சை நெரித்தார் அந்த பெண் தனது உயிர் குறித்து அச்சமடைந்தார் என்ற தகவலும் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளது.
தனுஸ்க குணதிலகவிற்கு பிணை வழங்கினால் அவர் நாட்டை விட்டு வெளியேறும் ஆபத்து அதிகம் என காவல்துறையின் சட்டத்தரணி வாதிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் சமூக ஊடகங்களில் துன்புறுத்தலிற்குள்ளாகியுள்ளார் எனவும் காவல்துறையின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
எனினும் பிணை வழங்கினால் தனுஸ்க குணதிலக நாட்டிலிருந்து வெளியேறுவார் என தெரிவிக்கப்படுவதை அவரது சட்டத்தரணிகள் மறுத்துள்ளனர்.