நதியா படத்துக்கு சென்சாரில் கடும் எதிர்ப்பு- ஏன் ?
நடிகை நதியா நடிப்பில் திரைக்கு வராத கதை படத்திற்கு சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏன் என்று விசாரிக்கையில் ” இப்படம் ஒரு பெண்ணும் பெண்ணும் சேரும் லெஸ்பியன் சம்பந்த பட்ட உறவு குறித்து பேசும் படமாக உள்ளதாம். மேலும் இப்படத்தில்; பெண்கள் மட்டுமே நடித்துள்ளனர், ஒரு ஆண் கூட கிடையாது.
நதியா தவிர இனியா, ஆர்த்தி, கோவை சரளா என பலர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் சான்றிதழுக்காக சென்சார் போர்டுக்கு சென்றது. படத்தை பார்த்தவர்கள் பெண்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சான்றிதழ் தர மறுத்தனர்.
பின்னர் அந்த நெருக்கமான காட்சிகளில் சிலவற்றுக்கு கத்தரிபோட்டுவிட்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.